கத்தி முனையில் முதியவரிடம் பைக், செல்போன் பறிப்பு!
சாத்தான்குளம் அருகே முதியவரை தாக்கி பைக், பணம், மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்அருகேயுள்ள இட்டமொழி தெற்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல்(60). இவர் தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திசையன்விளை சென்று விட்டு தஞ்சை நகரம் வழியாக பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது மர்ம நபர்கள், அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி இருந்து பைக், செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் உதவி ஆய்வாளர் பொன்னு முனியசாமி வழக்கு பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றார்.