பரமத்தி வேலூரில் சாலை பாதுகாப்பு வார விழா டூவீலரில் விழிப்புணர்வு பேரணி
பரமத்தி வேலூரில் சாலை பாதுகாப்பு வார விழா டூவீலரில் விழிப்புணர்வு பேரணி.;
ப.வேலூர், ஜன.31: பரமத்தி வேலூரில் போக்குவரத்து கோலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு டூ வீலர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமை வகித்தார். கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். பரமத்தி வேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா, பரமத்தி வேலூர் மோட்டார் வாகன ஆர்டிஓ சரவணன் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். பரமத்தி வேலூர் கந்தாசாமி கண்டர் கல்லூரி முன்பு பேரணி தொடங்கி பரமத்தி வேலூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது. பேரணியில் டூ வீலர் விபத்துகளை தடுப்பது குறித்தும், தலைகவசம் அணிந்து டூ வீலர் வாகனம் ஓட்ட வேண்டும். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் அர்ச்சுணன், கந்தசாமி கண்டர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.