புத்தகங்கள் என்ன தரும் தலைப்பில் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா.
நாமக்கல் மாவட்டம் ” 3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 9-ஆம் நாள் நிகழ்ச்சியில் நற்றமிழ் நாவரசு நல்லாசிரியர் முனைவர் கோபால.நாராயணமூர்த்தி நடுவராக கொண்டு புத்தகங்கள் என்ன தரும்?” என்ற தலைப்பில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது.;

நாமக்கல் மாநகராட்சி, பரமத்தி சாலை, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற 3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 9-ஆம் நாள் நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு அவர்கள் தலைமையில், நற்றமிழ் நாவரசு நல்லாசிரியர் முனைவர் கோபால.நாராயணமூர்த்தி நடுவராக கொண்டு ”புத்தகங்கள் என்ன தரும்?” என்ற தலைப்பில் நடைபெற்ற சுழலும் சொல்லரங்கத்தில் நல்லாசிரியர்.செல்வ.செந்தில்குமார் ”செல்வம் தரும்” என்ற தலைப்பிலும், ச.மாரியப்பப்பிள்ளை ”வீரம் தரும்” என்ற தலைப்பிலும், முனைவர் ந.மகேஷ்குமார் ”செல்வாக்கு தரும்” என்ற தலைப்பிலும் கருத்துகளை வழங்கினார்கள். முன்னதாக, நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஆ.குமரவேள் அவர்கள் ”இன்றைய வாழ்க்கையும் இலக்கியமும்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். முன்னதாக, நாமக்கல் மாவட்ட இயல், இசை கிராமிய கலைஞர்கள் என்.கே.பிரகாஷ் கலைக்குழுவினரின் தப்பாட்டம், தெம்மாங்கு பாடல் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்டத்தில், 3-ஆம் ஆண்டு மாபெரும் ”புத்தகத் திருவிழா” 1.2.2025 முதல் 10.02.2025 வரை 10 நாட்கள் பரமத்தி சாலை, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இப்புத்தக திருவிழாவானது 80-க்கும் மேற்பட்ட அரங்குகள், 20 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், பல்வேறு அரசு துறைகளின் பணி விளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு அவர்கள் கலைக்குழுவினர் மற்றும் சுழலும் சொல்லரங்கில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். புத்தக திருவிழாவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (விலங்கியல் துறை) முதுமுனைவர் க.சர்மிளா பானு அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக மாபெரும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தக அரங்குகள், மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி அரங்கு மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சியினை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும், புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி பூத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.10.02.2025 அன்று நாமக்கல் மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் பசுமை மா.தில்லை சிவக்குமார் அவர்கள் ”உன்னால் முடியும் தம்பி” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டிகள் மற்றும் கலை சுடர்மணி நாமக்கல் பிரபு வேணுகோபால் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) ந.கனக மாணிக்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.