பாஜக சார்பில் சமச்சீர் கல்வி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திண்டுக்கல் நாகல் நகரில் பாஜக சார்பில் சமச்சீர் கல்வி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்;

பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ஏழை எளிய மக்கள் அனைவரும் எளிமையாக பயில சமக்கல்வியை கொண்டு வந்துள்ளார். இதனை முன்னிட்டு திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் பொதுமக்களிடம் சமச்சீர் கல்வி பற்றி விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறி கையெழுத்து இயக்கம் பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் தெற்கு மாநகர தலைவர் வழக்கறிஞர் முருகேசன் தலைமையில், பொதுச் செயலாளர் செந்தில்குமார் , ஜீவரத்தினம் ஆகியோர் முன்னிலையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் மற்றும் மாநகராட்சி 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் தனபாலன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாவட்ட பட்டியல் அணி தலைவர் இளையராஜா, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் தேவராஜ், நகர பொருளாளர் சதீஷ்குமார், மேலும் நகர தெற்கு பாஜக நிர்வாகிகள் அங்கமுத்து,சங்கர், அம்மையப்பன், பாண்டியராஜன், இன்பராஜ், வெங்கடேசன், செந்தில்குமார், பாலாஜி, குமரவேல், சரவணன், விஜயகுமார், கணேசன், அலெக்ஸ், டி.ஆர்.பாலன், உட்பட பாஜக நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.