மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
மாரியம்மன் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா... திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்... அம்மன் குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலம்;

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவின் தொடக்கமாக, கடந்த 4-ம் தேதி திரளான பக்தர்கள் கன்னிமார் தீர்த்தம் எடுத்து காப்புக்கட்டி 15 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர். இந்த சூழலில், விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் அம்மன் குளத்தில் இருந்து பல்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.