தென்காசியில் எரிந்த நிலையில் பெண் சடலம். கைதான கணவர்

எரிந்த நிலையில் பெண் சடலம். கைதான கணவர்;

Update: 2025-02-13 05:18 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகே இலந்தூரில் நேற்று அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் சிவகாசியை சேர்ந்த கமலி என தெரியவந்துள்ளது. கமலியை கொலை செய்த கணவர் ஜான் கில்பர்ட் இரண்டு நாட்களாக நண்பர் ஒருவரின் காரில் வைத்து சுற்றித்திரிந்துள்ளார். கடைசியில் தென்காசி இலந்தூரில் உடலை எரித்து விட்டு ஜான் கில்பர்ட் தப்பியுள்ளார். கொலையாளியான கணவர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News