தோரணமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்;

Update: 2025-02-13 05:21 GMT
தென்காசி கடையம் சாலையில் உள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்றுடன் நிறைவு பெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசசனம் செய்தனர். அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. காலை 8. 45. மணிக்கு விசேஷ பூஜைகளும், தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணமும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு நிகழ்ச்சியாக ஊட்டி, திருக்குந்தசப்பை படுகர் இனமக்களின் பாரம்பரிய நடனமும், மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜையும், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்கள் கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து அங்குள்ள ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு நூலகத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களுர் பொறியியல் விஞ்ஞானி தனசீலன், ஆன்மீக எழுத்தாள் நித்திய கல்யாணி ஆகியோர் பங்கேற்று பல்வகை தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுதுவது குறித்து வழிகாட்டுதல், ஊக்கஉரை ஆற்றினர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இன்று காலை சிறப்பு பூஜை வழிபாட்டுடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.

Similar News