குற்றாலம் மெயின் அருவியில் அவசர கால வெள்ள மீட்புபணி ஒத்திகை
அருவியில் அவசர கால வெள்ள மீட்புபணி ஒத்திகை;
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் அவசர கால வெள்ள மீட்புபணி ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் , இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இதனையடுத்த மழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள்,பாதிப்பு குறித்தும், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் இன்று ஒத்திகை நிகழ்வை குற்றாலத்தில் மெயின் அருவியில் நிகழ்த்தினர்.வெள்ள பகுதி மற்றும் ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றில் சிக்கியவர்களை மீட்கும் வழிமுறை, வீட்டில் உள்ள பொருட் களை வைத்து வெள்ளத்திலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.