கபிலர் மலையில் தைப்பூச தேர் திருவிழா கடைசி நாள் நடராஜர் தரிசனம்.

கபிலர் மலையில் தைப்பூச தேர் திருவிழா கடைசி நாள் நடராஜர் தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-02-14 13:42 GMT
பரமத்தி வேலூர்,பிப். 14: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 11ம் தேதி தைப்பூச தேர்த்திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. தினந்தோறும் விநாயகர், ஈஸ்வரர்,அம்பாள், பைரவர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று கடைசி நாள் நடராஜ ஸ்வாமி எழுந்தருள் நிகழ்ச்சி மிக விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News