சேளூர் திருப்பதி முனியப்பன் சுவாமி கோவில் ஆண்டு விழா.

வேலூர் திருப்பதி முனியப்பன் சுவாமி கோவில் ஆண்டு விழா பொதுமக்களுக்கு அசைவ விருந்து.;

Update: 2025-02-17 13:40 GMT
பரமத்தி வேலூர், பிப். 17: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, சேளுர் சாணார்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற 42 அடி உயரம் கொண்ட திருப்பதி முனியப்ப சாமி கையில் ஆறடி உயரம் கொண்ட 800 கிலோ எடை உள்ள கத்தியுடன் வயற்காட்டில் நடுவில் அமைந்துள்ள திருப்பதி முனியப்ப சாமி கோவில் கிடா வெட்டு அன்னதான திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு (சனிக்கிழமை) காலை 7- மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். மதியம் 2- மணிக்கு முத்து கருப்பண்ணார் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 9 கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 9- மணி முதல் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கோவிலுக்கு வேண்டுதலுக்காக வழங்கிய சுமார் 300 ஆட்டுக்கிடாக்கள் வெட்டப்பட்டு விடிய விடிய அசைவ உணவு சமைக்கப்பட்டது. காலை 10 மணிக்கு சிறப்பு முனியப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 11 மணி முதல் அசைவ அன்னதான அன்னதானம் நடைபெற்றது. இதில் கோவிலுக்கு பக்தர்கள் வேண்டுதலுக்காக வழங்கிய 300 ஆட்டுக்கிடாக்களையும் பெரிய பெரிய பாத்திரங்களில் சமைத்து பக்தர்களுக்கு மாலை வரை வழங்கப்பட்டது. இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அசைவ அன்னதானத்தின் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜே. பி. ரவி, வெங்கரை பேரூராட்சி தலைவர் விஜி (எ) விஜயகுமார், முன்னாள் ஆவின் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசாமி கோவில் திருவிழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.

Similar News