பரமத்தி வேலூரில் நாட்டுக்கோழி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.

பரமத்தி வேலூரில் நாட்டுக்கோழி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2025-02-17 15:18 GMT
பரமத்தி வேலுார், பிப். 17- பரமத்தி வேலுார் சுல்தான் பேட்டையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி வாரச்சந்தை நடக்கிறது. இங்கு பரமத்தி, வேலுார், பொத்தனூர், பாண்டமங்கலம், நன்செய்இடையார், குப்புச்சிபாளையம், பாலப்பட்டி,, ஓலப்பாளையம், கபிலர்மலை, ஜேடர்பாளையம், மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை வளர்க்கும் வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வருவர். நேற்று கூடிய வாரச்சந்தையில், அதிக அளவில் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம் நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிலோவுக்கு, 150 ரூபாய் அதிகரித்து, 550 ரூபாய்க்கு விற்றதால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விலை ஏற்றத்திற்கு காரணம் கடந்த தை மாதம் முருகப்பெருமானுக்கு பொதுமக்கள் விரதம் இருந்ததால் ஒரு மாதங்களாக விலை சரிவில் இருந்தது தற்பொழுது மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து நாட்டுக்கோழி ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதால் விலை ஏற்றத்திற்கு காரணம் என்று தெரிவித்தனர்.

Similar News