பாண்டமங்கலம் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா.
பாண்டமங்கலம் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.;
பரமத்தி வேலூர், பிப்.20: பரமத்தி வேலூர் தாலுக்கா பாண்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கபிலர்மலை வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை பத்மாவதி அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் மருத்துவர் சோமசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியின் நூற்றாண்டு விழா கல்வெட்டை திறந்து வைத்தார். துணைத் தலைவர் முருகவேல் நூற்றாண்டு சுடரை ஏற்றி வைத்தார். விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,முன்னாள் ஆசிரியர்கள்,முன்னாள் மாணவர்கள்,மேலாண்மை குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.