குறிஞ்சிப்பாடி: முதல்வர் மருந்தகம் திறந்து வைப்பு
குறிஞ்சிப்பாடியில் முதல்வர் மருந்தகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.;
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் காக்கும் உன்னத திட்டமான முதல்வர் மருந்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.