ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி முன்னாள் அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.;
பரமத்திவேலூர், பிப்.24: பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி பாண்டமங்கலம் சேவல்கட்டு மூலை அருகேயுள்ள திருமலை நகரில் கபடி போட்டித் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராகா தமிழ்மணி, மாவட்ட இணைச் செயலாளர் இன்பத்தமிழாசி, முன்னாள் ஆவின் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வழக்கறி ஞர் அணி செயலாளர் தனசேகரன்,கபிலர்மலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜே.பி.ரவி, பரமத்தி ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், ரவி, எலச்சிபாளையம் ஒன்றிய கழக செயலாளர்கள் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் பொன்னுசாமி, பேரூர் செயலாளர் எஸ்.எம் நாராயணன்,சுகுமார். ரவீந்தர், செல்வராஜ். பொன்னிவேலு ஆகியோர் முன்னிலை வைத்தனர். வெங்கரை பேரூராட்சி தலைவரும், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளருமான விஜயகுமார் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பகுதியில் கபடி போட்டி நடத்துவது பெருமையாக உள்ளது. உள்ளூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த கபடி போட்டியை கட்சிப்பாகுபாடின்றி ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து ஊக்கப்படுத்துவது பெருமையாக உள்ளது என்று தெரிவித்தார். ஆண்கள் மற் றும் பெண்கள் கபடி போட் டிக்கான ஏற்பாடுகளைபாண் டமங்கலம் ஆர். என். ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவ னங்களின் செயலாளர் ராஜா செய்திருந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர். கிளைக் பொறுப்பாளர்கள். பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மக ளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டியில் தமிழ்நாட்டில் 73 அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இறுதிப் போட்டி இன்று இரவு முடிவடைகிறது அப்போது வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரி சுத் தொகையும் கோப்பைகளையும் வழங்க இருக்கிறார்கள். இக்கபடி போட் டியினைஏராளமான பொதுமக்கள்கண்டு களித்தனர்.