பரமத்தி வேலூரில் இளம் விவசாயிகள் சங்கம் செயற்குழு கூட்டம்.

பரமத்தி வேலூரில் இளம் விவசாயிகள் சங்கம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-02-25 16:13 GMT
பரமத்தி வேலூர், பிப். 25: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இளம் விவசாயிகள் சங்கம் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளம் விவசாயிகள் சங்கம் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையின்படி விவசாயம் அய்லாத நோக்கங்களுக்காக பிரதான விவசாய நிலம் மற்றும் காடுகளை பெருநிறுவனத் துறைக்கு மாற்றுவதை எடுக்க வேண்டும். விவசாய வேலையின் போது பாம்பு கடித்தோ,மின்சாரம் தாக்கியோ அல்லது இடி மின்னல் தாக்கியோவிவசாயிகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நிலமற்ற விவசாயிகள் குத்தகை நிலத்தில் 3 முதல் 5 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தம் செய்து அவற்றை பத்திர பதிவுத் துறையில் பதிவு செய்யாமல் விவசாயம் செய்து வருகிறார்கள் அவர்களுக்கு மானிய திட்டங்கள் வழங்கவும், உழவர் சந்தையில் விவசாய விளை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும். பரமத்தி வேலூர் தாலுகாவில் கிடப்பில் போடப்பட்டுள்ள வெற்றிவை ஆராய்ச்சி மையத்தை உடனடியாக நிறுவ வேண்டும். கோரை பயிரை புற்கள் (கலைப்பயிர்) பட்டியலில் இருந்து நீக்கி பணப்பயிர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பரமத்திவேலூர் பேரூராட்சியில் இயங்கி வரும் வாழைக்காய் மார்க்கெட்டில் வாழை விவசாயிகளிடம் இருந்து வசூல் செய்யும் சுங்கவரியை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் வளர்க்கக்கூடிய கோழி மற்றும் கால்நடைகளை வெறிநாய்கள் கடித்து உயிரிழப்பு ஏற்படுத்தினால் 45 தினங்களுக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து மானிய திட்டங்களின் மானிய தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி மழைநீரை சேமித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் மாதம் தோறும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் நாமக்கல் மாவட்ட செயலாளர் கௌதம் நன்றி உரையாற்றினார்.

Similar News