கீரம்பூர் அருகே புகையிலை பொருட்களை விற்ற நபர் கைது

கீரம்பூர் அருகே புகையிலை பொருட்களை விற்ற நபர் கைது செய்து விசாரணை.;

Update: 2025-02-26 15:06 GMT
பரமத்தி வேலூர், பிப்.26: நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோத விற்பனை செய்த டிரைவரை பரமத்தி போலீ சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீரம்பூர் சுங்கச் சாவடி அருகே ஒருவர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்ள்ளது. தகவலின் அடிப்படையில் பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை சட்ட விரோத மாக விற்பனை செய்து கொண்டிருந்த கீரம்பூர் அருகே உள்ள புதுப்பட்டி, குஞ்சாம்பாளையத்தை சேர்ந்த மணி(53) என்பவரை பரமத்தி போலீ சார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News