வேலகவுண்டம்பட்டி அருகே தனியார் கல்லூரியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.
வேலகவுண்டம்பட்டி அருகே தனியார் கல்லூரியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை.;
பரமத்திவேலூர்,மார்ச்.2: வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவர் தூக்குப்போட்டு தற் கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா. அவரு டைய மகன் பிரதீப்ராஜ் (வயது 17). இவர் நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே எர்ணாபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து வேளாண்மை பாடப்பிரிவு முதலாமாண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் அவருடைய அண்ணன் கிருபாகர னும் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் விடுதியில் இருந்த தம்பியை காணவில்லை என்று கூறி பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது 3-வது மாடியில் உள்ள மேற்கூரை இரும்பு கம்பியில் பிரதீப்ராஜ் கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் பிரதீப்ராஜ் உடலை போலீசார் மீட்டு பிரேதபரி சோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார். என்பது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.