வெங்கரை பேரூராட்சியில் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி.
வெங்கரை பேரூராட்சியில் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.;
பரமத்தி வேலூர்,மார்.2: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சியில் ஒரு சில வார்டுகளில் காங்கிரிட் சாலை வரவுல்லாதல் முன்னெச்சரிகை நடவடிக்கையாக பழைய குடிநீர் குழாய் வரிசிகளை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதிக ஆழத்தில் உள்ள குழாய்கள் பழுது ஏற்பட்டால் சாரிசெய்ய ஏதுவாக ஆழம் குறைவாக வைக்கும் பணியும் நடைபெற்றது வருகிறது. மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பழுதடைந்த விசை பாம்புகள், குடிநீர் தொட்டிகள், மிசராவிளக்குகள் ஆகியவற்றை சரிசெய்யும் பணியும் நடைபெற்றது வருகிறது. இப்பணியினை பேரூராட்சி தலைவர் விஜி(எ)விஜயகுமார் உடன் இருந்து பணி செய்து பார்வையிட்டு வருகிறார்.