கொண்டாநகரத்தில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி
மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி;
அய்யா வைகுண்டரின் 193வது அவதார விழா இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு கொண்டாநகரத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொண்டாநகரம் அருள் ஜோதிபதி தர்ம ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.