பரமத்தி வேலூர் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி விலை சரிவு.

பரமத்தி வேலூர் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி விலை சரிவு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.;

Update: 2025-03-04 14:13 GMT
பரமத்தி வேலுார், மார்ச்.4: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் பூக்கல் ஏல மார்க்கெட்டில் இன்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.400 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரம் கிலோ, 600 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் கிலோவுக்கு ரூ.200 விலை சரிவடைந்துள்ளது. இதேபோல் கடந்த வாரம், 200 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி ரூ.100 க்கும்,ரூ.200 ரூபாய்க்கு விற்ற அரளி 80 ரூபாய், 200 ரூபாய்க்கு விற்ற சாமந்தி பூ, 120 ரூபாய் என விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது கோடை காலம் துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். இதனால் வரத்து அதிகரித்து விலையும் சரியதொடங்கியுள்ளது. வரும் வாரங்களில் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

Similar News