தமிழகத்தில் தேங்காய் விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை.

தமிழகத்தில் தேங்காய் விலை உயர்ந்தும் தேங்காய் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;

Update: 2025-03-04 14:25 GMT
பரமத்திவேலூர்,மார்ச்.3: தமிழகத்தில் தேங்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் விலை உயர்ந்தாலும் விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம்,ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்களில் தான் அதிக அளவில் தேங்காய் மகசூல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கர்நாடகா, மராட்டி யம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களுக்கு தினந்தோறும் லாரிகள் மூலம் தேங்காய் ஏற்றுமதி செய்கிறார்கள். தேங்காய் வெட்டுதல்,வெட்டிய தேங்காய்களை எடுத்து செல்லுதல், உரித்தல் மற்றும் லாரிகளில் ஏற்றுதல் உள்ளிட்ட பணிகளில் தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் தற்போது தேங்காய் மகசூல் பாதியாக குறைந்ததால் ஏராளமான தொழிலாளிகள் வேலையின்றி பாதிப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு தென்னை மரம் ஒன்றில் இருந்து சுமார் 30 முதல் 35 தேங்காய்கள் வரை விவசாயிகளுக்கு கிடைத்தது. ஆனால் தற்போது ஒரு தென்னை மரத்தில் இருந்து சுமார் 10 முதல் 15 தேங்காய்கள் மட்டுமே கிடைக்கின்றது. கடந்த ஆண்டு தரமான தேங்காய் ஒன்று ரூ.8 முதல் ரூ.12 வரை விற்பனையானது. தற்போது தரமான தேங்காய் ஒன்று ரூ.14 முதல் ரூ.18 வரை விற்பனையாகிறது. தற்போது தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்தாலும் உற்பத்தி குறைந்ததால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும் தென்னையை தாக்கும் நோய்களை தடுக்க உரிய மருந்துகளை கண்டுபிடிக்க சம்பந்தப்பட்டதுறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தென்னை விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மாநில தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் பரமத்திவேலூரை சேர்ந்த ஜெகநாதன் கூறியதாவது:- கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி வெகுவாக குறைந்து உள்ளது. உற்பத்தி குறைவால் தென்னை விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும் இதையே நம்பி வாழ்க்கை நடத்தும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தென்னையை தாக்கும் நோய்களை தடுக்க சம்பந்தப் பட்டதுறையினர் புதிய மருந் துகளை கண்டுபிடித்து மாவட்ட அளவில் தென்னை விவசாயிகளை நேரில் சந்தித்து, உரிய ஆலோசனைகளை வழங்கிதென்னை விவ சாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Similar News