பரமத்திவேலூர் அருகே சவுக்கு தோப்பு, கோரையில் தீ விபத்து.
பரமத்திவேலூர் அருகே சவுக்கு தோப்பு, கோரை தீயில் எரிந்து நாசம்.;
பரமத்திவேலூர், மார்ச்.4- பரமத்திவேலூர் அருகே உள்ள பாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45), விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் பாய் தயாரிக்கும் கோரை பயிரிடப்பட்டு அவை அறுவடைக்கு தயாராக இருந்தது. தோட்டத்தில் பயிரிட்டு இருந்த கோரை அருகே காய்ந்த கழிவு கோரைகளை போட்டு வைத் திருந்தார். இந்நிலையில் காய்ந்த கழிவு கோரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மேலும் அதன் அருகே நடவு செய்திருந்த கோரையிலும் தீப்பற்றியது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் வேலாயுதம்பாளையம் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் ஏராளமான கோரைகள் தீயில் எரிந்து நாசமாயின. இதேபோல் பரமத்திவேலூர் அருகே காமாட்சி நகர் பகு தியை சேர்ந்தவர் நல்லம்மாள் (70). இவரது தோட்டத்தில் சவுக்கு மரங்களை நடவு செய்துள்ளார். இதில் சவுக்குமரத்தில் உள்ள கிளைகளை வெட்டி சவுக்கு தோப்பில் போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காய்ந்து கிடந்த கிளைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தகவல் அறிந்து வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்புதுறையினர் சவுக்குதோப்பில் பற்றி எரிந்த தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான சவுக்கு மரங்கள் தீயில் எரிந்து சேதமானது.