கந்தம்பாளையம் அருகே விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை.
கந்தம்பாளையம் அருகே விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை.;
பரமத்தி வேலூர், மார். 4: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம்பாளையம் காகித பிள்ளைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் ராஜேஷ்(50) (திருமணமாகவில்லை ). இவர் தனது தந்தை இறந்த நிலையில் தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ராஜேஷ்க்கு திருமணம் ஆகாத விரக்தியில் அதிக அளவில் மது அருந்தி வந்துள்ளார். மன உளைச்சல் மற்றும் மது போதையில் இருந்த ராஜேஷ் கடந்த 25 ஆம் தேதி வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். விஷம் அறுந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஸை பார்த்த அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி 3ஆம் தேதி காலை உயிரிழந்தார். தகவல் அறிந்து நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ராஜேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.