கந்தம்பாளையம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி.
நல்லூர் கந்தம்பாளையம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை.;
பரமத்தி வேலூர்,மார்.4: திருவண்ணாமலை மாவட்டம் பள்ளத்தூர் தாலுகா கருங்காலி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காசி இவரது மகன் மாயவன் (48). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள ஆவரங்காட்டு புதூர் பகுதியில் ஒரு தனியார் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் மூன்று வருடங்களாக தங்கி அங்கேயே வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 3 ஆம் தேதி மாயவன் அருகிலிருந்த ஒரு பெட்டிக் கடைக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்தபோது பரமத்திலிருந்து திருச்செங்கோடு நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று மாயவன் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த மாயவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தின் போது லாரியின் பின்னால் வந்த இன்னோவா கார் ஒன்று நிலைத்தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் சாலை விபத்தில் உயிர் இழந்த மாயவனின் உடலை மீட்டு பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.