கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

நாகர்கோவில்;

Update: 2025-03-07 12:52 GMT
அங்கன்வாடி காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் அனைவருக்கும் முகப்பாவனை பதிவு செய்யும் THR வழங்கு முறையை கைவிட வேண்டும், பத்து ஆண்டுகள் பணி முடிந்த பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி மாலை நேர கவனயீர்ப்பார்ப்பாட்டம் நடைபெற்றது.        இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News