நாகர்கோவில் கல்லூரியில் நாளை வானியல் அறிவியல் நிகழ்ச்சி

6 கிரகங்களை காணலாம்;

Update: 2025-03-07 13:36 GMT
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இயங்கி வரும் அறிவியல் சங்கம் மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து பல செயல்பாடுகளில் பணியாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.          அறிவியலை பிரபலப்படுத்துவதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து நாகர்கோவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அறிவியல் சங்கம் நாளை சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. நாளை 8-ம் தேதி இரவு 6 மணி முதல் 7.45 மணி வரை இந்நிகழ்ச்சியை காணலாம்.  இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள்  (பிளானட் பரெட்) இரவு வானத்தில் ஆறு கிரகங்கள் ஒரே நேரத்தில் தெரியும் நிகழ்வினை காணலாம்.

Similar News