ஜெயங்கொண்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்தல் குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

ஜெயங்கொண்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்தல் குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.;

Update: 2025-03-08 12:13 GMT
அரியலூர் மார்ச். 8- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தம் வழிகாட்டுதலின் படியும், கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பாலசுப்பிரமணியன் செயல்முறைகளுக்கினங்கவும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான , குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பயிற்சி ஜெயங்கொண்டம் தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியினை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் தலைமையேற்று துவக்கி வைத்தார். முன்னதாக வட்டார வள மைய பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி லூர்து சேவியர் அனைவரையும் வரவேற்றார் . மேலும் பயிற்சியில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லெட்சுமி பிரியா மற்றும் காவல்துறை உதவி அலுவலர்கள் கிளாரா ராஜலட்சுமி மற்றும் சுமதி ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் குற்ற செயல்களின் இன்னல்கள் குறித்தும், போக்சோ சட்டம் பற்றியும் எடுத்துரைத்தார்கள் .ஆசிரியர் பயிற்றுநர்கள் ஐயப்பன், சரவணன் , இளையராஜா, தாமோதரன் , கார்த்திகேயன் மற்றும் டேவிட் ஆரோக்கியராஜ் , கொல்லாபுரம் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செந்தில் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்த விழிப்புணர் பயிற்சியினை ஆசிரியர்களுக்கு வழங்கினார்கள். வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி பயிற்சியை பார்வையிட்டு குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கருத்துரை வழங்கினார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் இருந்து 90 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி லூர்து சேவியர் செய்திருந்தார்.

Similar News