மஞ்ச நாயக்கன்பட்டியில் சுடு தண்ணீர் காய்ச்சும் போது திடீரென தீப்பிடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு.
மஞ்ச நாயக்கன்பட்டியில் சுடு தண்ணீர் காய்ச்சும் போது திடீரென தீப்பிடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு.;
மஞ்ச நாயக்கன்பட்டியில் சுடு தண்ணீர் காய்ச்சும் போது திடீரென தீப்பிடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மஞ்ச நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி வயது 36. இவரது மகள் மகாசாலினி வயது 14. இவர் புலியூர் அருகே உள்ள ராணி மெய்யம்மை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் பிப்ரவரி 17ஆம் தேதி மதியம் 12 மணியளவில் அவரது வீட்டில் சுடு தண்ணீர் காய்ச்சுவதற்கு மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்து வேலை செய்யும்போது, எதிர்பாராத விதமாக மாணவியின் ஆடையில் தீ பற்றி சுமார் 50% வரை மாணவியின் உடல் கருகியது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி மார்ச் 9ஆம் தேதி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாணவியரின் தந்தை தங்கமணி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை கொண்ட காவல் துறையினர் உயிரிழந்த மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.