லத்துவாடி அருகே சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒருவர் பலி.
லத்துவாடி அருகே சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒருவர் பலி போலீசார் விசாரணை.;

ப.வேலூர், மார்ச் 14: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் மனோகரன். இவரது மாமனார் சச்சிதானந்தம் (68). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், மருமகனுடன் வசித்து வந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகள் வழி பேரன், அப்பகுதி தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, பேரனை, வகுரம்பட்டியில் டியூஷன் முடித்து விட்டு, டூவீலரில் சச்சிதானந்தம் அழைத்து வந்தபோது, சரக்கு ஆட்டோ டூவீலர் மீது மோதி விபத்துக்கு ள்ளானதில்படுகாயம் அடைந்தார் அவரை மீட்டு, அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்கு சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். மோகனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.