ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் அதிரடி உத்தரவு!;

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளுக்கான வீட்டுவரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில்வரி,தொழில் உரிமக்கட்டணம் ஆகியவற்றை வருகிற 20-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். பொதுமக்கள் ஊராட்சி வரியினங்களை செலுத்த சம்மந்தப்பட்ட ஊராட்சிகளின் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தங்களது ஊராட்சி வளர்ச்சிக்காக பொதுமக்கள் அனைத்து வரியினங்களையும் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.