பூச்சி மருந்து சாப்பிட்டு வாலிபர் தற்கொலை.
மதுரை உசிலம்பட்டி அருகே வாலிபர் தந்தை கண்டித்ததால் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

மதுரை மாவட்டம் பேரையூர் எம் அய்யம்பட்டி கிழக்கு தெருவில் வசிக்கும் பவுன்ராஜ் மகன் வசந்தகுமார்( 22) என்பவர் அக்னி ராணுவம் பயிற்சி அகடமியில் சேர்ந்து படித்து வந்திருக்கிறார். இந்த பயிற்சி வகுப்புக்கு சரிவர செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் இவரது பெற்றோர் இவரை கண்டித்துள்ளனர். இந்நிலையில் வசந்தகுமார் மன விரக்தியில் பூச்சி மருந்து சாப்பிட்டு கடந்த (மார்ச்.10) மதியம் வீட்டில் இருந்த பூச்சி மருந்து சாப்பிட்டு மயங்கிக் கிடந்துள்ளார். அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச்.15) மதியம் உயிரிழந்தார். இது குறித்து எம் கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.