மதுராந்தகத்தில் தூய்மை பணியாளரை ஒருமையில் பேசும் களப்பணியாளர்
மதுராந்தகத்தில் தூய்மை பணியாளரை ஒருமையில் பேசும் களப்பணியாளர்;
மதுராந்தகத்தில் தூய்மை பணியாளரை ஒருமையில் பேசும் களப்பணியாளர். செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகராட்சியில் களப் பணியாளராக பணிபுரிந்து வருபவர் ஞானவேல்.இவர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் நீலா என்பவரை தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேற்கும் ஆய்வுக்கு வரக்கூடாது எனவும் மற்ற தூய்மை பணியாளர்கள் முன்பு பெண் தூய்மை பணியாளரை பெண் ஊழியர் என்றும் பார்க்காமல் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் அதி வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நகராட்சியில் களப்பணியாளராக பணியாற்றி வரும் ஒருவர் தூய்மை பணியாளர்களை தரக்குறைவாக பேசுவதற்கு இவருக்கு யார் இந்த அதிகாரம் வழங்கி உள்ளனர். இதுபோன்று தூய்மை பணியாளர்களை ஒருமையில் பேசும் களப்பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.