
குமரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்க நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பேச்சிப் பாறை ஊராட்சிக்குட்பட்ட படுபாறை, வலியமலை மற்றும் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட புறாவிளை குடியிருப்பு பழங்குடி மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்குவது தொடர்பாக கலெக்டர் அழகு மீனா மக்களை சந்தித்து நேற்று கலந்துரையாடினார். அப்போது நில உரிமை கேட்டு விண்ணப்பம் செய்த மனுக்கள் அடிப்படையில் அதற்குரிய வரை படத்தை வைத்து கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் வன உரிமை சட்டத்தின் அடிப்படையில் தகுதியான அனைவருக்கும் நில உரிமை பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் தகுதியான மக்களுக்கு நில உரிமை வழங்கும் வகையில் விரைந்து நடவடி எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் மாங்காமலை பழங்குடி பகுதியில் கலைஞரின் கனவில்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மூன்று விடுகளை ஆய்வு செய்தார். அப்போது வீடுகளை விரைந்து கட்டி முடிக்க தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப் கலெக்டர் வினய்குமார் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.