வேலம்பட்டியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்.
வேலம்பட்டியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்.;

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி திமுக பேரூர் கழகம் சார்பில் முதல்வர் ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி வேலம்பட்டி பஸ் நிலையம் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பேரூர் கழகச் செயலாளர் தம்பிதுரை தலைமை வகித்தார். கிழக்குஒன்றிய செயலாளர் மகேந்திரன் வரவேற்று உரையாற்றினார். இதில் தலைமை கழகபேச்சாளர் சேலம் சுஜாதா அரசின் சாதனைகளை குறித்து விளக்கி பேசினார். இதில் திமுக நிர்வாகிகள் திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.