வேர்டு தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா.
வேர்டு தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாப்பட்டது.;

பரமத்தி வேலூர்,மார்ச்.16 நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பொத்தனூரில் செயல்பட்டு வரும் வேர்டு தொண்டு நிறுவனத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா அரிமா சங்க வளாகம் வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் வேர்டு நிறுவன செயலர் சிவகாமவல்லி வரவேற்று பேசினார். இவ்விழாவில் வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.bஅன்னை மகளீர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் சாருமதி பெண்களுக்கு தங்களின் வாழ்வில் கல்வி என்பது எந்த அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பற்றியும் ஒரு பெண் கல்வி பயின்றால் அப்பெண்ணின் தலைமுறை எவ்வாறு முன்னேற்றம் அடையும் என்பது குறித்து உரையாற்றினார். வழக்கறிஞர்கள் மகேஸ்வரி மற்றும் பிரேமா ஆகியோர் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் பற்றியும் சிறப்புரையாற்றினர். விழாவில் உலக மகளிர் தினத்திற்கான சுவரொட்டிகள் மகளிர் சுய உதவி குழு பெண்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. விழாவிற்கு வேலூர் அரிமா சங்கத் தலைவர் சிவக்குமார் மற்றும் அரிமா சண்முகம், வேலூர் காவல் நிலைய காவலர்கள் சுமதி மற்றும் சுய உதவி குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.