கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர்
கம்பைநல்லூரில் திமுக சார்பில் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர்;
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி கம்பைநல்லூரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மார்ச் 16, கம்பைநல்லூரில்,தருமபுரி மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் M.ராஜ்கமல் கம்பைநல்லூர் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சிவசக்தி ஆகியோர் ஏற்பாட்டில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் M.Sc,Phd, கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் C.கிருஷ்ணகுமார், மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ETTIசெங்கண்ணன், மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் M.ரத்தினவேல் நகரச் செயலாளர் E.மோகன்,பேரூராட்சி தலைவர் வடமலைமுருகன்,ஒன்றிய அவை தலைவர் பன்னீர்செல்வம் ,நகர அவை தலைவர் நடராஜன் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்டத் துணை அமைப்பாளர் அருண்உதயசூரியன் , மனோகரன்,தம்பிதுரை, நகரத் துணைச் செயலாளர் திருமால் , குப்புசாமி இளைஞர் அணி அமைப்பாளர்கள் குமரேசன்,தாஸ், சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.