மேம்பால கட்டுமான பணியின் போது விபத்து ஒருவர் உயிரிழப்பு
தொப்பூர் கணவாயில் மேம்பாலம் கட்டிடப் பணியின் போது விபத்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு காவலர்கள் விசாரணை;

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தொப்பூர் மலை கணவாயில் புதிய மேம்பாலப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தொப்பூர் கணவாய் அருகே உள்ள பப்பிரெட்டியூர் மண்ணுக்குழி என்ற பகுதியில் நேற்று மார்ச் 16 மாலை ராட்சச கான்கிரீட் தூணை தூக்கும் முயற்சியில் விபத்து ஏற்பட்டது. அதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் என்பவர் அடியில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தொப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.