திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசு கண்டித்து முன்னாள் அமைச்சர் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம்;

Update: 2025-03-17 02:00 GMT
  • whatsapp icon
தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நேற்று மாலை காரிமங்கலம் - மொரப்பூர் சாலையில் நடைபெற்றது இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவகுரு தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் மகேஷ் ஹரி பிரசாத் ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ மணி மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் சூடப்பட்டி சுப்பிரமணி முன்னாள் எம்எல்ஏக்கள் மனோகரன் வெங்கடாசலம் தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பி.பழனியப்பன்,தேர்தல் பணிக்குழு செயலாளர்கள் கம்பம் செல்வேந்திரன் மற்றும் சேலம் கபிலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News