காரிமங்கலம் அருகே காரில் குட்கா கடத்தியவர் கைது
காரிமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் சொகுசு காரில் 300 கிலோ குட்கா கடத்தியவர் கைது;

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்ப டுவதாக வந்த புகாரின் பேரில் எஸ்பி மகேஸ்வரன் நடவடிக்கை எடுக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து காரிமங்கலம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், உதவி காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் காவலர்கள் தர்மபுரி மாவட்ட எல்லையான கும்பாரஅள்ளி செக்போஸ்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, மார்ச் 17 இன்று அதிகாலை அவ்வழியே வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.அதில் தடை செய்யப் பட்ட குட்கா பொருட் கள் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் சொகுசு காரை ஓட்டி வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு குட்கா கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, காவலர்கள் 3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து, மகேந்திராவை கைது செய்தனர்.