மத்தூர்: திடீர் வலிப்பால் கூலி தொழிலாளி உயிரிழப்பு.
மத்தூர்: திடீர் வலிப்பால் கூலி தொழிலாளி உயிரிழப்பு.;

கிருஷ்ணகிரி மவட்டம் மத்தூர் அடுத்துள்ள செவ்வத்துார் ஊராட்சி மைக்காமேடு பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் ஆஞ்சி (35), கூலி தொழிலாளி. இவர் தனது மாமியார் ஊரான நத்தகாயம் கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வீடு திரும்பியபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்தவருக்கு வலிப்பு ஏற்பட்டு, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த மத்ததூர் போலீசார் ஆஞ்சயின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.