
அறந்தாங்கி அருகே அனுமதியின்றி மது விற்கப்படுவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் இடையார் ரோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட பாப்பாகுடியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.