மகன் மாயம். தாய் புகார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மகன் காணவில்லை என்று அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.;

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமாட்சி நகர் ஆறுமுகம் தெற்கு தெருவை சேர்ந்த அழகர்சாமியின் மகன் ரவி (35 )என்பவர் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ரவி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று அவரது தாயார் காமாட்சி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.