சிகிச்சைக்காக சென்ற நோயாளி திடீர் மரணம்
மதுரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளி திடீர் மரணம் அடைந்தார்;

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கொக்கிகுளத்தை சேர்ந்த ராமுவின் மனைவி தேவி (50) என்பவர் தனது கர்ப்பபையை அறுவை சிகிச்சை செய்து எடுப்பதற்காக உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார் .நேற்று( மார்ச் .18) காலை இவரது கர்ப்பபை அகற்றப்பட்டு ஆபரேஷன் முடிந்த பின்னர் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் .அங்கு வந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து அவருடைய நாடி துடிப்பு தொடர்ந்து குறைய ஆரம்பித்து உயிரிழந்தார். இது தொடர்பாக கணவர் ராமு உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.