வட்டார கல்வி அலுவலர் தலைமையில் பள்ளி ஆண்டு விழா
மாரண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் தலைமையில் ஆண்டு விழா மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சியோடு தொடங்கியது;
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, மாரண்டஅள்ளி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் வடக்கு பள்ளியில் ஆண்டு விழாவானது இன்று காலை 10 மணிக்கு தலைமை ஆசிரியர் செ.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். ஆசிரியை கிருஷ்ணவேணி பள்ளியின் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவ மாணவிகள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகியவை இடம் பெற்றது. மேலும் இந்த விழாவில் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர், பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் கீதா, அசோக் லேலாண்ட் , LLF ஆசிரியர்கள் சிவன்னா , புஷ்பா, தாமரை செல்வி, கரண், மற்றும் மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.