குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அபிஜா ஷெரின் எம் இ பட்டதாரி. பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சாரோடு பகுதியை சேர்ந்த அஜய் சாபு என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அபிஜா ஷெரின் பெற்றோரின் 101 தங்க நகைகளும் 4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கமும், சொகுசு கார் வாங்குவதற்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் குடும்ப வன்முறை ஈடுபட்டதாகவும் அஜய் சாபு குடும்பத்தினர் மீது குழித்துறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அபிஜா ஷெரின் வழக்கு தொடர்ந்தார். இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் அஜய் சாபு, அபிஜா ஷெரினுக்கு மாதம் ரூபாய் 5000 வீட்டு வாடகை கொடுக்க வேண்டும், அஜய் சாபு அவரது குடும்பத்தினரோ அபிஷாவின் மீது எந்த குடும்ப வன்முறையும் செய்யக்கூடாது, மாதா மாதம் பிள்ளைகளுக்கு சேர்த்து ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும், மேலும் வழக்கு தொடுத்த காலத்தில் இருந்து நிறுவையிலிருந்து ரூபாய் 8 லட்சத்து 80 ஆயிரம் ஜீவனாம்சம் நிலுவை தொகை உடனடியாக செலுத்த வேண்டும், மன உளைச்சலுக்காக ரூ. 10 லட்சம், தங்க நகைகள் அனைத்தும் உடனடி திருப்பி கொடுக்க வேண்டும் என்று குழித்துறை மாஜிஸ்திரேட் மோசஸ் ஜெபசிங் தீர்ப்பு கூறினார்.