மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

அருமனை;

Update: 2025-03-20 03:50 GMT
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள நல்லூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (72).  மரம் வெட்டும் தொழிலாளி. நேற்று மேல்புறம் பகுதியில் உள்ள ஒரு அயனி மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். சுமார் 30 அடி உயரத்தில் நின்று கிளைகளை வெட்டும் போது தனிஸ்லாஸ் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.       இதனால் பலத்த காயமடைந்து சுயநினைவு இழந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருமனை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தனிஸ்லாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.       இது குறித்த தகவலின் பெயரில் அருமனை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவருடைய மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News