கன்னியாகுமரி பூம்புகார் சிற்றுண்டி நிலையம் மூடல்

சுற்றுலா பயணிகள் அவதி;

Update: 2025-03-20 05:27 GMT
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டி நிலையம் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதியுறுகின்றனர்.  தினசரி சுமார் 5000 சுற்றுலாப் பயணிகள் மற்றும் சீசன் காலங்களில் 10,000–12,000 பேர் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் கண்ணாடி பாலம் காண வருகிறார்கள்.  உணவகம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் 5 மணி நேரம் பசியுடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒப்பந்த காலம் முடிவதால் சிற்றுண்டி நிலையம் மூடப்பட்டது.  இதை பொது ஏலத்தில் விட வேண்டும் என அதிமுக, பாஜக கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டியன், ஏப்ரல் முதல் வாரத்தில் சிற்றுண்டி நிலையம் திறக்கப்படும் என தெரிவித்தார்.

Similar News