ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற கேரளா முதியவர்

கன்னியாகுமரி;

Update: 2025-03-20 06:30 GMT
கன்னியாகுமரி ரயில் நிலைய நடை 1-ல் நேற்று நிஜாமுதீன் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பயணிகள் இறங்கி சென்ற பின்னர் ரயில் இன்ஜினை யார்டு பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது திடீரென முதியவர் ஒருவர் இன்ஜின் முன் பாய்ந்தார்.       இதை கவனித்த என்ஜின் டிரைவர் இன்ஜினை நிறுத்தியதால் முதியவர் காயமின்றி தப்பினார். அவரை மீட்டு,  ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். நாகர்கோவில் ரயில்வே போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அவர் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதி சேர்ந்த பவித்ரன் (65) என்பது தெரிய வந்தது. இவர் மாவு மில் நடத்தி வந்ததாகவும், தொழில் கடன் ஏற்பட்டதால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தவர் வீட்டில் யாரையும் தெரிவிக்காமல் நாகர்கோவில் வந்து தற்கொலைக்கு ஈடுபட்டதாக கூறினார்.       பின்னர் போலீசார் அவரை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்து விட்டு , உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் வந்தபின் பவித்ரன் விருப்பப்பட்டால் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Similar News