தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை.
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது;

பரமத்தி வேலூர், மார்ச். 22: பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோப்பணம் பாளையம் ஸ்ரீ காலபைரவர்,பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோயில்களில் பரிவார தெய்வமாக உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பல்வேறுவாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பைரவருக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசனம் செய்தனர்.