ஆனையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு
மதுரை அருகே ஆனையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.;
மதுரை அருகே பெரும்பிடுகு முத்தரையர் 1350 வது சதயவிழாவை முன்னிட்டு ஆனையூர் பகுதியில் வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் , ஆனையூர் கிராம பொதுமக்கள் மற்றும் பரம்ப நாடு வீர விளையாட்டு நலச்சங்கம் சார்பில் இன்று (மார்ச்.23)நடைபெற்ற மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியினை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான மஞ்சுவிரட்டு ரசிகர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.